அனைவருக்கும் வணக்கம் ,
ஜோதிட ரீதியாக,ஒரு ஜாதகத்தில் 2வது மற்றும் 11வது அதிபதிகள் பலமாக உள்ள போது அந்த ஜாதகருக்கு பண வரவு நன்றாக இருக்கும்...
இதற்கென நிறைய விதிகள் உள்ளது … அவை,

5ம் அதிபதி, எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னத்தில் இருக்கும் போது, அந்த ஜாதகர் தன் வாழ் நாளில் ஒரு முறையாவது பணக்காரராக ஆகும் வாய்ப்பு உள்ளது.
11ம் அதிபதி ஆட்சி உச்சமாக இருந்தால் பணக்காரராக ஆகலாம் .
2,7மற்றும் 11ம் அதிபதிகள் கேந்திரம் அல்லது திரிகோண நிலையில் அமர்ந்திருந்தால் பணக்காரராக ஆகலாம்
2ம் அதிபதி குருவாக இருந்து ,கேது உடன் இணைந்து ,அந்த இருவரும் ஆட்சி உச்சம் பெறும் போது அந்த ஜாதகர் கோடீஸ்வரர் ஆகலாம் . அதற்கு காரணம் என்னவென்றால் கேது பகவான் ஞான காரகன் ஆவார் . குரு பகவான் ஜாதகரின் குண நலன்களை எடுத்துரைப்பவர் . கேது – குரு இவர்கள் இருவரும் இணையும் போது, இந்த அமைப்பில் உள்ள ஜாதகர் வாழ்வு பிடிப்பில்லாமல் அமையும் .அந்த அமைப்புடைய ஜாதகர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அவர் வாழ்க்கையில் விரக்தி ஒன்றே குடி கொண்டு காணப்படும் .
ஆண் ஜாதகர் ஒருவருக்கு சனி பகவான் அமைந்துள்ள இடத்தில் இருந்து திரிகோண அமைப்பில் சுக்கிரன் இருந்தால் அவருக்கு மனைவியாக வருபவரின் மூலம் அவர் நல்ல செல்வ நிலையை அடைய முடியும்.
பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய் பகவான். செவ்வாய்க்கு திரிகோணத்தில் குரு பகவான் உள்ள போது ,அந்த ஜாதகிக்கு தனக்கு வரும் கணவரின் மூலம் செல்வம் , புகழ் ,ஆகியவை கிட்டும் வாய்ப்புள்ளது.
11ம் அதிபதியும் ,2ம் அதிபதியும் இணைந்து ஜாதக கட்டத்தில் நின்று, பொது தன காரகரான குரு பகவானின் பார்வையில் இருக்கும் பொழுது அந்த ஜாதகரும் மிகப் பெரிய பணக்காரராகலாம்.
ஜாதக கட்டத்தில் தன காரகன் குரு பகவானின் திரி கோணத்தில் பொருளணி கிரகங்களான சுக்கிரன் , சனி , புதன் ஆகியோர் இருக்கும் போது பணக்காரராகலாம்.
இந்த விதிகள் அனைத்தும் பொது விதிகளே . இந்த பொது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை நடக்க குறிப்பிட்ட கிரகங்களின் இணைவு , பார்வை ,பரிவர்த்தனை ஆகியவை பெரும் பங்கு வகிக்கும்.
பொதுவாக ஒரு இல்லத்தின் பணச் சேர்க்கைக்கு, அந்த இல்லத்தில் வசிப்பவர்கள் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள மஹா லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் .தொடர்ந்து செய்யும் போது இல்லத்தில் பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம்.🙏
அன்புடன்,
லெட்சுமி நாராயணன்.
காணொளி வடிவில் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.👇
Comentarios